பற்களைப் பாதுகாக்க

Posted by

பல் போனால் சொல் போச்சு என்பார்கள். அதாவது திருத்தமாகப் பேச முடியாது. மேலும் முழுமையான ருசியையும் உணர முடியாது. கடினமாக பொருட்களையும் சாப்பிட முடியாது. முக அழகும் குறைத்துவிடும். ஆகவே பற்களை பாதுகாப்பது மிக மிக அவசியம்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்றார்கள். ஆலம் விழுது, வேப்பம் குச்சி, கருவெலங்குச்சி ஆகியவற்றை உபயோகித்து பல் விளக்கினால் பல் பிரச்சினை ஏற்படாது. இவற்றுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால், கருவேலம்பட்டை, வேப்பம்பட்டை பொடியை உபயோகிக்கலாம். இவையும் கிடைக்காவிட்டால், கடைகளில் விற்கப்படும் மூலிகைப் பொடிகளை உபயோகிக்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில் பற்பசைகளை உபயோகிக்கலாம்.

காலையில் பல்விலக்கிய பின் 5-10 மில்லி நல்லெண்ணெய் வாயில் விட்டு சில நிமிடங்கள் வரை கொப்பளித்து, எண்ணெய் நீர்த்த்பின் துப்பிவிட வேண்டும். இரவு படுக்கும் முன்பும பல்லை விளக்கிவிட்டு, வெந்நீரில் சிறிதளவு உப்பு கலந்து சில நிமிடங்கள் கொப்பளித்த பின் துப்ப வேண்டும். இந்த பழக்கம் பற்களை நன்கு பாதுகாக்கும். மேலும் இந்நூலில் கூறியபடி மலத்தயும் முழுவதுமாக கழித்து வரும்பொழுது எக்காலத்திலும் பற்களுக்கு தீங்கு வராது.

தினசரி காலை உணவிற்கு முன்பு சில தேங்காயைத் துருவல்களை சவைத்து தின்றபின் ஓரிரு வாழைப் பழங்களும் ஓரிரு பேரிச்சை பழங்களும் சாப்பிட வேண்டும். தேங்காய் பல்லுக்கு நல்ல உறுதியை அளிக்கும். இது பல்லுக்கு உறுதி கொடுக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.