தக்காளி குருமா

Posted by

தேவையான பொருள்கள்

பச்சை பட்டாணி – 1/4 கப்

காரட் – 2

பீன்ஸ் – கைப்பிடி அளவு

தக்காளி – 6 பெரியது

வெங்காயம் – 3

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 4 பல்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

பட்டை – 1

லவங்கம் – 1

சோம்பு – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

சாம்பர்பொடி – 1 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – கைப்பிடி அளவு

செய்முறை:

காரட், பீன்ஸ் மற்றும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும்.

எண்ணெயில் கடுகு, சோம்பு, பட்டை, லவங்கம் தாளித்து, பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை நீங்கியதும் பச்சை மிளகாய, வெங்காயம், தக்களியைச் சேர்த்து சிறிது உப்பு தூவி வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாம்பார்பொடி, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.

ஆறியதும் நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன காரட், பீன்ஸ், பட்டணியைச் சேர்த்து தேவையான உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும்.

ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி தானாக வெளியேறியதும் மூடியை திறந்து, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

(குறிப்பு: பட்டாணிக்கு பதில் வேக வைத்த சன்னாவும் சேர்க்கலாம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.