கத்திரிக்காய் சப்ஜி

Posted by

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய் – 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் – 3
  • தக்காளி – 4
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
  • உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி – கைப்பிடி அளவு
  • உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

2 விசில் வந்ததும் இறக்கி விடவும். தானாக ஆவி வெளியேறியதும் திறந்து கத்திரிக்காய் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, மத்தால் நைசாகக் குழையும் வரை கடையவும்.

எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கத்திரிக்காய் கூட சேர்த்துக் கலக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கத்திரிக்காய் கலவையோடு சேர்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.