Egg fried rice

Posted by

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி-1கப்
  • பெரிய வெங்காயம் சிறியதாக வெட்டியது-3
  • கேரட்-1
  • பீன்ஸ்-15
  • குடை மிளகாய்-1
  • மிளகு தூள்-1/2 ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு
  • முட்டை-3
  • சோயா சாஸ்- சிறிது
  • வெங்காயத்தாள்-சிறிது
  • நெய்-2ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் குக்கரில் நெய் ஊற்றி,அரிசியை சேர்த்து வதக்கவும்.
  • அதில் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு 1 சத்தம் விடவும்.
  • குக்கரை உடனே ஆவியை வெளியேற்றி விடவும்.
  • சாதத்தை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
  • உப்பு சேர்த்து கொள்ளவும் தேவைக்கு.
  • காய் அரை வேக்காடு வெந்ததும்,முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
  • அதில் மிளகு தூள், சோயா சாஸ் சேர்த்து,அதை சாதத்துடன் சேர்த்து கலக்கவும்.
  • மேலே வெங்காய தாழ் தூவினால் பிரைட் ரைஸ் ரெடி.
  • முட்டை ஊற்றாமல் விட்டு விட்டால் வெஜ் ப்ரைட் ரைஸ்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.