வெஜிடபிள் பிரியாணி 1

Posted by

தேவையான பொருட்கள்:

 • சீரக சம்பா அரிசி-1 டம்பளர்
 • வெங்காயம் நீள வாக்கில் வெட்டியது-1
 • தக்காளி-1
 • மிளகாய்-2
 • உப்பு
 • நெய்
 • எண்ணெய்
 • மல்லி தூள்-1 டேபிள் ஸ்பூன்
 • மிளகாய் தூள்-1டேபிள் ஸ்பூன்
 • உருளை,பீட்ரூட்,பச்சை பட்டாணி,காரட்,பீன்ஸ் சேர்ந்த கலவை-1 கப்
 • பிரிஞ்சி இலை
 • தேங்காய் பால்-1டம்பளர்
 • தயிர்
 • லெமன்

மசாலா அரைக்க:

 • ஏலக்காய்-3
 • கிராம்பு-3
 • அன்னாசி பூ-1
 • பெருஞ்சீரகம்-1 டீ ஸ்பூன்
 • இஞ்சி-1 துண்டு
 • பூண்டு-6 பல்
 • பட்டை-1 துண்டு
 • மல்லி இலை, புதினா -1 கப்
 • வெங்காயம் பெரியது-1

 இவை அனைத்தையும் அரைத்து விழுதாக வைத்து கொள்ளவும்.

செய்முறை:

 • முதலில் அரிசியை ஊற போட்டு வைத்து கொள்ளவும்
 • குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த மசாலா,1/2லெமன்,3 ஸ்பூன் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
 • அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 • தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
 • மிளகாய் சேர்க்கவும்.
 • அடுத்து மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
 • இதில் காய்கறிகளை போட்டு கிளறி தட்டு வைத்து மூடி பாதி அளவு காய்கறிகளை வேக விடவும்.
 • அடுத்து உப்பு சேர்த்து 1 டம்பளர் அரிசிக்கு 2 டம்பளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
 • ஏற்கனவே 1 டம்பளர் தேங்காய் எடுத்து வைத்துள்ளோம்.
 • அதனுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்கறிகலவையில் சேர்த்து கொதிக்க விடவும்.
 • மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
 • தண்ணீர் கொதித்ததும்,அரிசியை சேர்த்து வேக விடவும்.
 • முக்கால் பாகம் வெந்ததும் தோசை கல்லை அடுப்பில் போட்டு அதன் மேல் குக்கரை வைத்து மூடி வைக்கவும்.
 • 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.
 • சுவையான வெஜிடேபிள் பிரியாணி ரெடி.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.