ரச வங்கி

Posted by

தேவையான பொருட்கள்:

 • கத்திரிக்காய்-1/4 கிலோ
 • புளி-1லெமன் அளவு
 • வெங்காயம்-100கிராம்
 • காய்ந்த மிளகாய்-6
 • பெருங்காயம்-சிறுத்துண்டு
 • கடலை பருப்பு,மல்லி-2டீ ஸ்பூன்
 • சீரகம்,மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்
 • தேங்காய் துருவல்-1 டீ ஸ்பூன்
 • மிளகாய் தூள்-2 டீ ஸ்பூன்
 • கடுகு,உளுந்து-1ஸ்பூன்
 • கறிவேப்பிலை,மல்லி இலை- சிறிது
 • எண்ணெய்,உப்பு- தேவைக்கு

செய்முறை:

 • கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக்கி,அவற்றுடன் தண்ணீர் சிறிது,காயம்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து கடலை பருப்பு, மல்லி,மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஆகியவற்றை தனிதனியாக வறுக்கவும்.
 • ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்.
 • வெந்த கத்திரிக்காயை மத்தால் மசித்துக்கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
 • அதில் மசித்த கத்திரிக்காய்,புளி கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 • பச்சை வாசனை போனதும், பொடியை சேர்த்து, மல்லி தழை தூவி இறக்கவும்.
 • இது இட்லி,தோசை,பொங்கலுக்கு ஏற்றது.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.