முறுக்கு 1

Posted by

தேவையான பொருட்கள்:

 • இட்லி அரிசி-2 டம்ளர்
 • பொறிகடலை -1 டம்ளர்
 • வெண்ணெய்-2 ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • காயம்-1/2 டீ ஸ்பூன்
 • எண்ணெய்-பொறிக்க
 • கருப்பு எள்-சிறிது

செய்முறை:

 • முதலில் அரிசியை ஒரு 4 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் இட்லிக்கு அரைக்கும் பக்குவத்தில் தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
 • பொறிகடலையை மிக்சியில் திரித்து, சலித்து கொள்ளவும்.
 • அந்த பொடியை அரிசி மாவில் கலந்து,வெண்ணெய் சூடு பண்ணி ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
 • அதில் உப்பு,காயம்,எள் சேர்த்து கொள்ளவும்.
 • எண்ணெயை சூடாக்கி அதில் ஒரு கரண்டி ஊற்றி நன்கு பிசையவும்.
 • பின்னர் எண்ணெயை காயவைத்து, முறுக்கு குழலில் பிழிந்து எடுத்தாலே சுவையான,எளிமையான முறுக்கு தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.