முனியாண்டி விலாஸ் கோழிக் குழம்பு

Posted by

தேவையான பொருட்கள்:

  • கோழி-1கிலோ
  • வெங்காயம்-3 பெரியது
  • தக்காளி-3 மீடியம் சைஸ்
  • மிளகாய் தூள்-2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1/2ஸ்பூன்
  • சிக்கன் மசாலா-2 டீ ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு
  • அரைத்த தேங்காய் விழுது-1/2கப்
  • கறிவேப்பிலை-2கொத்து
  • கொத்தமல்லி இலை-1 கட்டு
  • வெங்காயத்தாள்-1 தண்டு
  • எண்ணெய்-3டேபிள் ஸ்பூன்

அரைக்க:

  • இஞ்சி-2 இன்ச்
  • பூண்டு-6 பெரிய பல்
  • வரமிளகாய்-5
  • கிராம்பு-5
  • லவங்கம்-5
  • பட்டை-2இன்ச்
  • சோம்பு-1 டீ ஸ்பூன்
  • சீரகம்-1 டீ ஸ்பூன்
  • கசகசா-1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

  • முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய விடவும்.அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வ வரை வதக்கவும். 
  • அடுத்து மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,சிக்கன் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  • அடுத்து தக்காளி,கறிவேப்பிலை,உப்பு சிறிது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  • இந்த சமயத்தில் சிக்கன் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி,மூடி போட்டு வேக விடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.சிக்கனில் உள்ள தண்ணீரே போதும்.
  • சிக்கன் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
  • கடைசியாக மல்லி தழை, வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.