முட்டை பன்னீர் டிக்கா ரைஸ்

Posted by

தேவையான பொருட்கள் :

 1. பன்னீர் – 100 கிராம்
 2. முட்டை – 2
 3. பாசுமதி ரைஸ் – 200 கிராம்
 4. குடை மிளகாய் – 2
 5. தக்காளி – 2
 6. வெங்காயம் – 2
 7. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 8. மல்லி தூள் – 1 ஸ்பூன்
 9. கரம்மசாலா – 1/2 ஸ்பூன்
 10. எலுமிச்சை – 1
 11. உப்பு – தேவைக்கு
 12. இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன்
 13. தயிர் – 2 ஸ்பூன்
 14. ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன்
 15. க்ரேவிக்கு தேவையான பொருட்கள்:
 16. 3 தக்காளி அரைத்த கூல்
 17. தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
 18. மிளகாய் 2 பெருஞ்சீரகம் 1 ஸ்பூன் சேர்த்து அரைத்த விழுது
 19. கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன்
 20. கிராம்பு – 2 நம்பர்
 21. பட்டை – 1 நம்பர்
 22. பிரியாணி இலை – 2 நம்பர்
 23. சோள மாவு – 1 ஸ்பூன்
 24. உப்பு – தேவைக்கு
 25. மிளகு தூள் – சிறிது

செய்முறை :

1.முதலில் காய்கறிகளை ஊற வைக்கவும்.அதற்க்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், குடைமிளகாய்,உப்பு,கரம்மசலா,மிளகாய் தூள்,மல்லிதூள்,இஞ்சி பூண்டு விழுது,தயிர், எலுமிச்சை சாறு பாதி,ஆலிவ் எண்ணெய் கடைசியில் தக்காளிபோட்டு கலந்து வைக்கவும். ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

2. அடுத்து பன்னீரையும் இன்னொரு பாத்திரத்தில் போட்டு மேலே சொன்ன அணைத்து பொடியையும் இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு,ஆலிவ்போட்டு தனியாக அரை மணி நேரம் ஊற விடவும்.

3.அரை மணி நேரம் கழித்து அடுப்பில் தவா வைத்து சிறிது எண்ணெய் போட்டு அதில் கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை போட்டு சிறு தீயில் வேக விடவும்.மாத்தி மாத்தி போட்டு வேகவிடவும். அதேபோல் பன்னீரையும் வேக விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.

4.அடுத்து க்ரேவிக்கு ரெடி செய்யவும்.இரும்பு சட்டியை அடுப்பில் வைத்து , எண்ணெய் போட்டு பட்டை,கிராம்பு,பிரியாணி இலை போட்டு நன்கு வதக்கவும்.பின்பு தக்காளி கூல் போட்டு , பச்சை மிளகாய் பெருஞ்சீரகம் அரைத்த கலவை,தக்காளி சாஸ்,மிளகு தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பின்பு சோள மாவு தண்ணீரில் கரைத்து தக்காளி கலவையில் கலக்கவும்.2 நிமிடம் கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்.

இந்த தக்காளி கலவையுடன் காய்கறி கலவை,பன்னீர் கலவையை சேர்க்கவும்.பின்பு அதன் மேல் கஸ்தூரி மேத்தி போட்டு மெதுவாக கலந்து விடவும்.இப்பொழுது டிக்கா மசாலா ரெடி.

5.அடுத்து பாசுமதி ரைஸ் தனியாக வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

6.சிறிது எண்ணெய் விட்டு முட்டையை பொரித்து வைத்து கொள்ளவும்.

7.இறுதியாக ரைஸ்,முட்டை,டிக்கா கலவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால்               முட்டை பன்னீர் டிக்கா ரைஸ் ரெடி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.