முட்டை சுக்கா

Posted by

ஈரோடு ஜுனியர் குப்பண்ணா முட்டை சுக்கா 
இந்த முட்டை சுக்கா ஈரோடு குப்பண்ணாவில் மிகவும் சுவையுடையது ஆகும்.  
தேவையான பொருட்கள்:
வேகவைத்த  முட்டை  5

சின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது )

தக்காளி  2 ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி-பூண்டு  விழுது  1 1/2 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்  1/2 தேக்கரண்டி 

 வரமிளகாய் தூள்  1 மேஜைக்கரண்டி 

கொத்தமல்லி தூள்  1 1/2 தேக்கரண்டி 

கரம்மசாலா தூள்  1 1/2 தேக்கரண்டி 

மிளகு தூள்  1 தேக்கரண்டி 

பச்சை மிளகாய்  3 ( பொடியாக நறுக்கியது )

பட்டை  1 இன்ச் 

இலவங்கம்  3

அண்ணாச்சி மொக்கு 1

கறிவேப்பில்லை 1 கைப்பிடி 

வேர்கடலை எண்ணெய்  2 மேஜைக்கரண்டி + 1 1/2 மேஜைக்கரண்டி 

உப்பு  தேவையான அளவு 
செய்முறை:
1.  வேகவைத்த முட்டைகளை தோல் நீங்கி சரிபாதியாக வெட்டி கொள்ளவும். 
2. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், அண்ணாச்சி மொக்கு போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். 
3. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள  பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 
4. இந்த கலவை நன்றாக கூழ் போல் ஆனவுடன் அதில் வரமிளகாய் தூள், கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க  நன்றாக வதக்க வேண்டும்.  பிறகு சிறிது சிறிதாக 1 1/2 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
5. இப்பொழுது அந்த சரிபாதியாக வெட்டி வைத்துள்ள முட்டை துண்டங்களை கொதிக்க வைத்துள்ள மசாலா கலவையில் மஞ்சள் நிற பகுதி மசாலாவில் படுமாறும் வெள்ளை பகுதி மேலே வருமாறும் போடவும். அடுப்பை சிறுதீயில் வைத்து மெதுவாக கொதிக்க வைக்க வேண்டும். இச்சமயத்துல மிளகு தூளை தூவவும்.
6. அந்த மசாலா கிரேவியை முட்டையின் வெள்ளை நிற பகுதியின் மீதும் படுமாறு ஒரு கரண்டியை கொண்டு எடுத்து மேலே ஊற்ற வேண்டும். மசாலா சுண்ட ஆரம்பித்தவுடன் சிறிது சிறிதாக வேர்கடலை எண்ணெய் ஊற்றவும். நன்றாக சுருள மசாலா வந்தவுடன் இந்த முட்டை சுக்காவை பிரியாணி மற்றும் கீ ரைஸ் போன்றவற்றடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.