மிளகாய் சட்னி

Posted by

தேவையான பொருட்கள்:

  • வெங்காயம்-2
  • வரமிளகாய்-4
  • பூண்டு-3
  • புளி-1 இன்ச்
  • பெருங்காகாயம்-1 சிட்டிகை
  • எண்ணெய்-2 டீ ஸ்பூன்
  • உப்பு-தேவைக்கு

தாளிக்க:

  • கடுகு
  • உளுந்தம் பருப்பு
  • கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்

செய்முறை:

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும் 
  • பின்பு அதில் பூண்டு,புளி, வரமிளகாய்,காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி,உப்பு போட்டு ஆற விடவும்.
  • மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • தாளித்து ஊற்றினால் மிளகாய் சட்னி தயார்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.