மட்டன் பிரியாணி 1

Posted by

தேவையான பொருட்கள்:

  • சீரக சம்பா அரிசி-3 டம்பளர்
  • வெங்காயம் நீள வாக்கில் வெட்டியது-2
  • தக்காளி-2
  • மிளகாய்-4
  • உப்பு
  • நெய்
  • எண்ணெய்
  • மல்லி தூள்-2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள்-1 1/2 டேபிள் ஸ்பூன்
  • மட்டன்-1 கிலோ
  • பிரிஞ்சி இலை
  • தேங்காய் பால்-2டம்பளர்
  • தயிர்
  • லெமன்
  • மசாலா அரைக்க:

    • ஏலக்காய்-4
    • கிராம்பு-4
    • அன்னாசி பூ-2
    • பெருஞ்சீரகம்-2 டீ ஸ்பூன்
    • இஞ்சி-3 துண்டு
    • பூண்டு-6 பல்
    • பட்டை-3துண்டு
    • மல்லி இலை, புதினா -2 கப்
    • வெங்காயம் பெரியது-1

     இவை அனைத்தையும் அரைத்து விழுதாக வைத்து கொள்ளவும்.

    செய்முறை:

    • முதலில் அரிசியை ஊற போட்டு வைத்து கொள்ளவும்
    • குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்த மசாலா,1/2லெமன்,3 ஸ்பூன் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
    • அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
    • தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
    • மிளகாய் சேர்க்கவும்.
    • அடுத்து மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
    • இதில் மட்டனை போட்டு கிளறி தட்டு வைத்து மூடி பாதி அளவு  வேக விடவும்.
    • அடுத்து உப்பு சேர்த்து 1 டம்பளர் அரிசிக்கு 2 டம்பளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
    • ஏற்கனவே 2 டம்பளர் தேங்காய் எடுத்து வைத்துள்ளோம்.
    • அதனுடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மட்டனில் ஊற்றி கொதிக்க விடவும்.
    • மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
    • தண்ணீர் கொதித்ததும்,அரிசியை சேர்த்து வேக விடவும்.
    • முக்கால் பாகம் வெந்ததும் தோசை கல்லை அடுப்பில் போட்டு அதன் மேல் குக்கரை வைத்து மூடி வைக்கவும்.
    • 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்து ஒரு கிளறு கிளறி விடவும்.
    • சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.