பூண்டு மிளகு குழம்பு

Posted by

தேவையான பொருட்கள்:

 • பூண்டு-5 முழு பூண்டு
 • மிளகு-1/2ஸ்பூன்
 • தனியா-1ஸ்பூன்
 • மிளகாய் வத்தல்-5
 • புளி கரைசல்-தேவையான அளவு
 • கறிவேப்பிலை
 • கடலை பருப்பு
 • உளுந்தம் பருப்பு
 • சீரகம்
 • உப்பு
 • அரிசி மாவு

செய்முறை:

 • கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை,மிளகு,மிளகாய் வத்தல் வெறும் கடாயில் போட்டு வறுக்கவும்.
 • இதை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
 • பின்னர் தண்ணீர் விட்டு பொடி,அரிசி மாவு கரைத்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை,பூண்டு போட்டு வதக்கவும்.
 • அது வதங்கியதும்,புளி கரைசல், உப்பு,பொடி அரிசி மாவு கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

https://youtu.be/lde79BqnB04

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.