புளி குழம்பு

Posted by

தேவையான பொருட்கள்:

 • புளி-1 எலுமிச்சை அளவு
 • மல்லி தூள்-2 ஸ்பூன்
 • மிளகாய் தூள்-1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
 • காயம்-1/4 ஸ்பூன்
 • ஜீரகத்தூள்-1/2 ஸ்பூன்
 • சின்னவெங்காயம்-7
 • தேங்காய்-3 துண்டு
 • வெந்தயம்,கடுகு,உளுந்து-தாளிக்க
 • நல்லெண்ணெய்-2ஸ்பூன்
 • கருவேப்பிலை-தேவைக்கு
 • கத்திரிக்காய்-5
 • முருங்கைக்காய்-2
 • தக்காளி-1

  செய்முறை:

  • புளியை கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
  • காய்கறிகளை வெட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • தேங்காயை தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்து கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம் நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,உளுந்து,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • சின்ன வெங்காயத்தை போட்டு வதங்கியதும்,காய்கறிகளை சேர்க்கவும்.
  • பின்னர் புளி கரைசல் சேர்த்து,பொடிகளை சேர்த்து உப்பு சேர்க்கவும்.
  • நன்கு கொதித்ததும்,இறுதியாக தேங்காய் விழுது சேர்த்து இறக்கவும்.

  குறிப்பு:

  புளி குழம்புக்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.


  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.