பீட்ரூட் சாதம்

Posted by

தேவையான பொருட்கள் :

 • பீட்ரூட் – 1
 • பாசுமதி அரிசி – 1 டம்ளர்
 • வெங்காயம் – 1
 • மிளகாய் வத்தல் – 6
 • கிராம்பு,பட்டை,பிரியாணி இலை, ஏலக்காய்,கடல்பாசி-

அன்னாசி பூ – தலா 2

 • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
 • உப்பு – தேவைக்கு
 • மல்லி தழை – சிறிது
 • நெய். – சிறிது

 

செய்முறை :

 • முதலில் குக்கர் அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி மசாலா பொருட்களை போட்டு வதக்கவும்.
 • அடுத்து வெங்காயம் போட்டு வேக விடவும்.
 • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 • மிளகாய் வத்தல் சேர்க்கவும்.
 • அடுத்து துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.
 • 5 நிமிடம் கழித்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
 • அடுத்து அரிசியை போட்டு குக்கரை மூடி வைக்கவும்.
 •  1 சவுண்ட் வந்ததும் இறக்கவும்.
 •  மல்லி இலை தூவி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.