பாவ் பாஜி

Posted by

தேவையான பொருட்கள்:

 • பிரெட்-4
 • வெண்ணெய்-தேவையான அளவு
 • உருளை கிழங்கு-1
 • பட்டாணி- 1 சின்ன கப்
 • குடை மிளகாய்-1
 • கேரட்-1
 • தக்காளி-2
 • வெங்காயம்-3
 • பாவ் பாஜி மசாலா-2 ஸ்பூன்
 • மிளகாய் பொடி-சிறிது
 • மல்லி தூள்-1ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • மல்லி தழை-தேவையான அளவு
 • லெமன்-1

செய்முறை:

 • உருளைக்கிழங்கு,பட்டாணி,கேரட்,குடைமிளகாய் குக்கர் இல் போட்டு நன்கு மசிய வேக வைத்து,மசித்து கொள்ளவும்.
 • தக்காளி,வெங்காயம் சிறியதாக அரிந்து கொள்ளவும்.
 • சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும்.
 • அதில் மசித்த காய்கறி,பாவ் பாஜி மசாலா,மிளகாய் பொடி,மல்லி தூள்,போட்டு நன்கு வதக்கவும்.
 • இறுதியாக வெண்ணெய் சிறிது சேர்த்து,மல்லி தூவி இறக்கவும்.
 • பிரட் ஐ வெண்ணெய் தடவி தோசை கல்லில் போட்டு எடுத்து கொள்ளவும்.
 • மேலே சொன்ன கிரேவி உடன் சிறிது வெங்காயம் தூவி,லெமன் உடன் பரிமாறவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.