பாவக்காய் புளி குழம்பு

Posted by

நம்மில் பலருக்கு பாவக்காய் கண்டாலே பிடிக்காது.ஏனெனில் அதில் இருக்கும் கசப்பு தன்மை.சுவைகளில் 7 சுவை உண்டு.அதில் இந்த பாவக்காய் கசப்பு சுவைக்கு உரியது.நம் முன்னோர்கள் கசப்பு சுவை உடைய பாவக்காயை சாப்பிட ஏன் பழக்க படுத்தியு ள்ளார்கள் எனில் , அது உடம்பில் உள்ள புழு க்கள் அனைத்தையும் அளித்து, நம்மையும் நம் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் என்பதற்கே.சரி இனி ஆரோக்கியமான பாவக்காயை குழந்தைகளும் சாப்பிடும் வண்ணம் எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 •   பாவக்காய்                   – 200 கிராம்
 •   புளி                                  –  1 எலுமிச்சை                                                      அளவு
 •  சின்ன வெங்காயம்  – 1 கப்
 •  சாம்பார் பொடி            – 2 ஸ்பூன்
 •  உப்பு                                 – தேவையான                                                     அளவு
 •  கறிவேப்பிலை            – சிறிது  
 •  பூண்டு                             – 4 பல்
 •  காயம்                                – சிறிது
 •  வெந்தயம்                        –  சிறிது

 

செய்முறை:

 •  முதலில் பாவக்காய் கழுவி பொடிதாக      வெட்டி வைக்கவும்.
 •  அதே போல் வெங்காயத்தையும்                  பொடியாக வெட்டி வைக்கவும்.
 •  கடாயை அடுப்பில் வைத்து சிறிது              நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயத்தை    போட்டு வெடிக்க செய்யவும்.
 •  வெந்தயம் வெடித்ததும்                        கறிவேப்பிலை,வெங்காயம்,பூண்டு    போட்டு  நன்றாக வதக்கவும்.
 • அடுத்து பாவக்காய் சேர்த்து அரை வேக்காடு வேகும் வரை விடவும்.
 • அடுத்து உப்பு போட்டு புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வரும் வரை விடவும்.
 • சாம்பார் பொடியை சேர்த்து மூடி போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரைகொதிக்க விடவும்.
 • சுவையான சத்தான பாவக்காய் புளி குழம்பு தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.