பரோட்டா சால்னா (மதுரை ஸ்டைல்)

Posted by

தேவையான பொருட்கள்:

 • தக்காளி-4
 • வெங்காயம்-4
 • பூண்டு-7பல்
 • இஞ்சி-5 சிறிய துண்டு
 • கறிவேப்பிலை-2 கொத்து
 • மிளகு-1ஸ்பூன்
 • முந்திரி-3
 • சோம்பு-1ஸ்பூன்
 • பட்டை- 1 
 • சீரகம்-1/2 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
 • மிளகாய் தூள்-1ஸ்பூன்
 • மல்லி தூள்-2 ஸ்பூன்
 • கொத்தமல்லி இலை-1 கை பிடி
 • தேங்காய்-1/2கப்
 • உப்பு-தேவையான அளவு
 • சிக்கன்-1 கிலோ
 • நல்லெண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

 •  2தக்காளியையும்,2 வெங்காயத்தையும் அரைக்க எடுத்து வைத்து கொள்ளவும்.
 • மிளகு,முந்திரி,சோம்பு,பட்டை,சீரகம் ஆகியவற்றை வெறும் கடாயில் வறுக்கவும்.
 • எவை அனைத்தும் வெடித்ததும்,கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
 • அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
 • பின்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லி தூள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை,தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 • ஆறவிட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
 • உப்பு சேர்க்கவும்.
 • இவை வெந்ததும் சிக்கன் சேர்க்கவும்.
 • சிக்கன் வெந்ததும் அரைத்த  மசாலா ,தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க  விட்டு இறக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.