பருப்பு வடை

Posted by

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு-2கப்

சின்ன வெங்காயம்-10

பல்லாரி-1

பச்சை மிளகாய் -3

இஞ்சி-1 சின்ன துன்டு

வற்றல்-1

கருவேப்பிலை இலை- 1 கைப்பிடி

மல்லி இலை- தேவைக்கு

சீரகம்,  சோம்பு-1 ஸ்பூன்

பெருங்காயதூள்- 2சிட்டிகை

உப்பு- தேவைக்கு

எண்ணெய்- பொறிப்பதற்கு
செய்முறை:
பருப்பை 3-4 மணி நேரம் ஊற வைத்து பின்பு பருப்புடன் வற்றல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.
.வெங்காயம்,ப .மிளகாய், 

கருவேப்பிலை இலை, மல்லி இலை இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை சீவிக் கொள்ளவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, சீரகம், சோம்பு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்பு ஒவ்வொரு உருன்டையாக எடுத்து வடை தட்டி வைத்து கொள்ளவும். பின்பு எண்ணெயை காய வைத்து வடையை பொறித்து எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.
சட்னி:
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்- 1/2 கப்

புண்டு பல்-2

மிளகாய்-3-4

பொறி கடலை-2ஸ்பூண்

உப்பு- தேவைக்கு
செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து வடையுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.