பன்னீர் டிக்கா கிரேவி

Posted by

தேவையான பொருட்கள்:

 • பன்னீர்-100 கிராம்
 • பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 கப்
 • பொடியாக நறுக்கிய தக்காளி-1 கப்
 • மிளகாய் பொடி-1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1 டேபிள் ஸ்பூன்
 • கரம் மசாலா-1 டேபிள் ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • லெமன்-1
 • தண்ணீர்-தேவைக்கு
 • எண்ணெய்-தேவைக்கு
 • தயிர்-2ஸ்பூன்

செய்முறை:

 • முதலில் பன்னீர் ,லெமன்,உப்பு,மிளகாய் பொடி,கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து கிளறி ஊற விடவும்.
 • கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம்,தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.முறுக வேக விடவும்.
 • பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
 • பின்பு இதை ஆற விட்டு,மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
 • பின்பு தவாவை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் எடுத்து போட்டு,சுட்டு எடுக்கவும்.
 • மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை கடாயில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
 • கலந்து வைத்த பன்னீரில் உள்ள தயிர் கலவையை சிறிது தண்ணீர் ஊற்றி சேர்க்கவும்.
 • கொதித்ததும் பன்னீர் டிக்காவை  போட்டு கொதிக்க விடவும்.
 • கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.