நாட்டு கோழி கறி

Posted by

தேவையான பொருட்கள் :

நாட்டுகோழி 1/2 கிலோ 

தேங்காய் துருவல்  2 மேஜைக்கரண்டி 

சின்ன வெங்காயம்  18 பெரியது  ( பொடியாக நறுக்கியது )

வரமிளகாய்  9

மிளகு  2 தேக்கரண்டி 

சீரகம்  1 தேக்கரண்டி 

பூண்டு  7 பற்கள் 

இஞ்சி  1 இன்ச் 

கொத்தமல்லி விதை  1 தேக்கரண்டி 

கிராம்பு  2

பட்டை  1 இன்ச் 

அண்ணாச்சி மொக்கு  1

மராட்டிய மொக்கு  1

வெந்தயம்  1/4 தேக்கரண்டி 

தக்காளி  1 ( பொடியாக நறுக்கியது )

கடுகு  1/2 தேக்கரண்டி 

சோம்பு 1 தேக்கரண்டி 

கசாகசா 1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை  1 கொத்து 

வேர்கடலை எண்ணெய் 1 1/2 மேஜைக்கரண்டி 

உப்பு தேவையான அளவு 
செய்முறை :

1. ஒரு வடசட்டியில் தேங்காய் துருவல், வரமிளகாய், வெந்தயம், கொத்தமல்லி விதை, சீரகம், இஞ்சி, பூண்டு, இலவங்கம், பட்டை, அண்ணாச்சி மொக்கு, மராட்டிய மொக்கு, மிளகு, சோம்பு மற்றும் கசகசா  ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தனியாக எடுத்து வைத்து குளிர வைக்கவும். 
2. வறுத்து வைத்துள்ள இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும். 
3. இப்பொழுது பிரஷர் குக்கரில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும்  அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
4. பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க , பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை  கொதிக்க வைக்கவும். அதில் நன்றாக கழுவி வைத்துள்ள  நாட்டுக்கோழி துண்டங்களை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க.   பிறகு மூடியை மூடி 4 விசில் விட்டுகோங்க. 
5. இந்த குழம்பு நன்றாக காரசாரமாகவும் இருக்க வேண்டும். குழம்பு கெட்டி தன்மை அவர்அவர்கு ஏற்ப பார்த்து கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.