திணை அரிசி உப்புமா

Posted by

தேவையான பொருட்கள்:

 • திணை-1கப்
 • வெங்காயம்-1
 • கேரட்-1
 • குடை மிளகாய்-1 சிறியது
 • பச்சை பட்டாணி-1/2 கப்
 • காய்ந்த மிளகாய்-2
 • கடுகு,உளுந்து
 • காயம்-சிறிது
 • மஞ்சள் தூள்-சிறிது
 • கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிது
 • எண்ணெய்-தேவைக்கு
 • உப்பு-தேவைக்கு

செய்முறை:

 • வெங்காயம்,கேரட்,குடை மிளகாய்,கொத்தமல்லி இலை பொடியாக அரிந்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,காய்ந்த மிளகாய்  போட்டு தாளித்து கொள்ளவும்.
 • வெங்காயம் சேர்த்து வதங்கியதும்,பச்சை பட்டாணி,கேரட்,குடை மிளகாய் சேர்க்கவும்.
 • இதில் 1 கப் திணை அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
 • கொதித்ததும் உப்பு,கறிவேப்பிலை,மஞ்சள் தூள்,காயம் போட்டு திணை அரிசியை சேர்த்து மூடி வைக்கவும்.
 • அடுப்பை மிதமான தீயில் வைத்து,10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
 • கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.