தட்டை

Posted by

தேவையான பொருட்கள்:

 • இட்லி அரிசி – 250 கிராம்
 • பொறிகடலை-1டம்ளர் அரிசிக்கு 1/2 டம்ளர்
 • கடலை பருப்பு,அரை உளுந்து ஊற வைத்தது-சிறிது
 • மிளகாய் வத்தல்,பூண்டு-மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி கொள்ளவும்.
 • பெருங்காய தூள்-வாசனைக்கு
 • எண்ணெய்-பொரிக்க
 • கறிவேப்பிலை-தேவையான அளவு
 • வெண்ணெய்-சிறிது
 • உப்பு-தேவைக்கு

செய்முறை:

 • இட்லி அரிசி  3 மணி நேரம் ஊற விடவும்.
 • பின்பு கட்டியாக அரைத்து கொள்ளவும்.
 • பொறிகடலையை மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்து கொள்ளவும்.
 • இட்லி மாவு,பொறிகடலை பொடி, மிளகாய் வத்தல் பூண்டு கலவை,காயம்,உப்பு போட்டு கிளறி கொள்ளவும்.
 • சிறிது வெண்ணெய் உருக்கி மேலே கூறிய கலவையில் சேர்க்கவும்.
 • அடுத்து கறிவேப்பிலை,காய்ச்சிய எண்ணெய் சூடாக கலந்து கொள்ள வேண்டும்.
 • எண்ணெயை காய விட்டு ,உள்ளங்கையில் தட்டி போட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.