தடியங்காய் மோர் குழம்பு

Posted by

தேவையான பொருட்கள்:

 • தடியங்காய்-100 கிராம்
 • கட்டி தயிர்-1 கப்
 • பச்சை மிளகாய்-3
 • சீரகம்-1 டேபிள் ஸ்பூன்
 • கடுகு உளுந்து-தாளிக்க
 • கறிவேப்பிலை
 • மல்லி இலை
 • துவரம் பருப்பு, பச்சரிசி,கடலை பருப்பு ஊற வைத்தது-தலா 1/2ஸ்பூன்
 • தேங்காய் -சிறிய துண்டு
 • உப்பு-தேவைக்கு
 • மஞ்சள் தூள்-1பின்ச்

செய்முறை:

 • முதலில் தடியங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு சேர்த்து,வேக வைத்து கொள்ள வேண்டும்.
 • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து கறிவேப்பிலை  போட்டு தாளித்து கொள்ளவும்.
 • துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி,தேங்காய்,மிளகாய்,சீரகம்  சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • அந்த கலவையை தாளிசத்தில் ஊற்றி,உப்பு மஞ்சள் தூள் சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.
 • அதில் தடியங்காய் சேர்த்து கிளறி 2 நிமிடம் விடவும்.
 • தேங்காய் வாடை போற வரை கொதிக்க விட கூடாது.
 • அதில் மோரை நன்கு கடைந்து சேர்க்கவும்.
 • லேசாக சூடு ஏறியதும்,மல்லி இலை தூவி இறக்கவும்.
 • குறிப்பு: பருப்பு வடை,வெண்டைக்காய் போட்டும் மோர் குழம்பு செய்யலாம்.தடியங்காய்க்கு பதில்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.