டிபன் சாம்பார்

Posted by

தேவையான பொருட்கள்:

  • வேக வைத்த துவரம் பருப்பு-1கப்
  • தக்காளி-2
  • மிளகாய் பொடி-1ஸ்பூன்
  • காய்கறிகள் விரும்பியது-1கப்
  • கறிவேப்பிலை
  • மல்லி இலை
  • உப்பு

மசாலா செய்ய:

  • மிளகு-1/2ஸ்பூன்
  • வெந்தயம்-1/2ஸ்பூன்
  • கடலை பருப்பு-1ஸ்பூன்
  • துவரம் பருப்பு-1/2ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1ஸ்பூன்
  • பச்சரிசி-1/2ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்-1கப்
  • பெருங்காயம்-1/2ஸ்பூன்
  • மிளகாய் வற்றல்-7
  • எண்ணெய்

செய்முறை:

  • மசாலா செய்ய மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும், எண்ணெயில் வதக்கி ,மிக்ஸியில் அரைக்கவும்.
  • குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்து,கறிவேப்பிலை,வெங்காயம் போட்டு தாளித்து கொள்ளவும்.
  • பின்பு அதில் தக்காளி,மிளகாய் பொடி,காய்கறிகள்,வேகா வைத்த பருப்பு,மசாலா,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • மல்லி தழை தூவி பரிமாறவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.