சுரைக்காய் கூட்டு

Posted by

சுரைக்காய் பெண்களுக்கு மிகவும் நல்லது.இது பெண்களின் கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் ஏற்றது.மேலும் டையேட்டில் இருப்பவர்களுக்கு உடம்பிற்கு வேண்டிய நீர்  சத்தை கொடுக்கவல் ளது.வாரம் ஒரு முறையாவது சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

தேவையான பொருட்கள்:

  • சுரைக்காய் – 1
  • துவரம் பருப்பு – 100கிராம்
  • பூண்டு – 3 பல்
  • பச்சை மிளகாய்- 5 கீறியது
  • உப்பு -தேவையான அளவு
  • தேங்காய் – 2 ஸ்பூன்
  • கடுகு உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவைக்கு
  • ஜீரகம்- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  •  மிளகாய்    வத்தல் -3

 

செய்முறை:

  •  முதலில் சுரைக்காயை தோல் சீவி,உள்ளே உள்ள விதைகளை நீக்கி,சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
  • அடுத்து பருப்பு,சுரைக்காய் வெட்டியது,மஞ்சள்,பூண்டு,தேங்காய் துருவியது,பச்சை மிளகாய் இரண்டாக கீறியது,உப்பு அனைத்தையும் குக்கரில் போட்டு 3 சத்தம் வரும் வரை விடவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும்,கடுகு உளுந்து ,கரிவேப்பிலை ஜீரகம்போ,காய்ந்த மிளகாய் வத்தல் போட்டு தாளித்து பருப்பு கலவையில் சேர்த்தால் சுரைக்காய் கூட்டு ரெடி.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.