சீலா மீன் குழம்பு

Posted by

தேவையான பொருட்கள்:

 • சீலா மீன் வட்டமாக வெட்டியது-5 துண்டு
 • புளி கரைசல்- 1 எலுமிச்சை அளவு
 • வெந்தயம்-1 ஸ்பூன்
 • சின்ன வெங்காயம்-1கப்
 • கறிவேப்பிலை-1 கொத்து
 • தேங்காய் விழுது- 4 சில் அரைத்து.
 • மிளகாய் தூள்-1ஸ்பூன்
 • மல்லி தூள்-2ஸ்பூன்
 • ஜீரக தூள்-1/2 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • தக்காளி-1
 • நல்லெண்ணெய்-1குழி கரண்டி சிறியது

செய்முறை:

 • சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
 • மீனை கழுவி எடுத்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
 • வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • அடுத்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
 • புளி கரைசல் சேர்த்து அதில் ஒரு கொதி வந்ததும்,பொடிகளை சேர்த்து கொதிக்க விடவும்.
 • எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில்,தேங்காய் விழுது சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன்,மீனை சேர்த்து சிறு தீயில் கடாயை மூடி வைக்கவும்.
 • 10 நிமிடத்தில் மீன் நன்றாக வெந்து விடும்.
 • மேலே கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் மீன் குழம்பு ரெடி.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.