சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி

Posted by

தேவையான பொருட்கள் :

  1. வெங்காயம் – 2
  2. தக்காளி – 1
  3. கிராம்பு – 2
  4. பட்டை – 1
  5. பிரியாணி இலை – 2
  6. ஏலக்காய் – 2
  7. அன்னாசி பூ – 1
  8. கடல் பாசி – 1
  9. மிளகாய். – 4
  10. பட்டை ,கிராம்பு,பெருஞ்சீரகம்,கடல்பாசி பொடித்தது- 1 ஸ்பூன்
  11. தேங்காய் பால் – 1 டம்ளர்
  12. பாசுமதி அரிசி – 1 டம்ளர்
  13. இஞ்சி பூண்டு விழுது – சிறிது
  14. மல்லி தழை, புதினா இலை – சிறிது
  15. நெய், எண்ணெய் – சிறிது
  16. காய்கறி:
  17. பச்சை பட்டாணி
  18. காரட்
  19. பீன்ஸ்

செய்முறை :

  1. முதலில் குக்கர் அடுப்பில் வைத்து சிறிது நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்களை போட்டு வெடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகிற வரை வதக்கவும்.
  3. அடுத்து மிளகாய்,மல்லி,புதினா போட்டு வதக்கவும்.
  4. காய்கறிகளை சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.
  5. அடுத்து 1 டம்ளர்க்கு 2 டம்ளர் தண்ணி சேர்க்கணும்.
  6. 1 டம்ளர் தேங்காய் பால் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. தண்ணீர் கொதித்ததும் அரச்ச கரம்மசலா போடி சேர்த்து கொதிக்க விடவும்.
  8. அடுத்து அரிசி சேர்த்து 1 விசில் சவுண்ட் வந்ததும்
  9. வெஜிடபுள் பிரியாணி ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.