சிந்தாமணி சிக்கன்

Posted by

இந்த வகை சிக்கன் கோயமுத்தூர் பகுதியில் மிகவும் பிரபலம். அனைத்து ஓட்டல்களிலும் கிடைக்கும். அதிகம் மசாலா இல்லாத உணவு. 
தேவையான பொருட்கள் 
சிக்கன் 500 கிராம் 

நல்லெண்ணை 3 மேஜைக்கரண்டி 

கடுகு 1/2 தேக்கரண்டி

இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி 

கறிவேப்பிலை 2 கொத்து 

சிவப்பு காய்ந்த சீனி மிளகாய் 15 ( விதைகளை நீக்கவும் )

வெங்காயம் 2 பெரியது 

கொத்தமல்லி இலை 1 கைப்பிடி 

மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி 
செய்முறை

1. சிக்கனை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கி கொள்ளவும். 
2. சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும். 
3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும், பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
4. பிறகென்ன இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
5. மிளகாய் வற்றல்லை இரண்டு துண்டுகளாக வெட்டி வடைச்சட்டியில் இடவும், பின்னர் அதை நன்றாக வதக்கவும். 
6. சிக்கன் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும். 
7. அடிக்கடி நடுவில் கிளறிவிடவும் அடிப்பிடிக்காமல் இருப்பதற்காக. 
8. 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து நன்றாக ட்ரை மற்றும் ஃப்ரை ஆகும் வரை வதக்கவும்.
9. தேங்காய் துருவலை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறவும். 
10. பின்னர் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.