சிக்கன் பிரியாணி 1

Posted by

தேவையான பொருட்கள்:

 • பாசுமதி அரிசி-1கிலோ
 • சிக்கன்-1 1/2 கிலோ
 • வெங்காயம்-5
 • தக்காளி-5
 • இஞ்சி பூண்டு விழுது-4 டேபிள் ஸ்பூன்
 • கொத்தமல்லி இலை-2 கைப்பிடி
 • புதினா-1கைப்பிடி
 • பச்சை மிளகாய்-4
 • கிராம்பு-4
 • பட்டை-1 இன்ச் 3 நம்பர்
 • ஏலக்காய்-4
 • மிளகாய் பொடி-2டேபிள் ஸ்பூன்
 • மல்லி தூள்-1 டேபிள் ஸ்பூன்
 • எண்ணெய்/ நெய்-தேவைக்கு
 • உப்பு-தேவைக்கு

அரைக்க:

 • இஞ்சி பூண்டு, கிராம்பு,பட்டை ,மல்லி இலை, புதினா மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

செய்முறை:

 •  குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி கொள்ளவும்.
 •  அதில் கிராம்பு,ஏலக்காய்,பட்டை,போட்டு வெடித்ததும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை விடவும்.
 • அடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
 • பின்பு தக்காளி,மிளகாய்,புதினா,கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
 • 10 நிமிடம் வரை வதங்கியதும்,மல்லி,மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கவும்.
 • அடுத்து சிக்கன்,உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்.
 • அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசி சேர்த்து வேக விடவும்.
 • பாதி அரிசி வெந்ததும்,தம் போடவும்.
 • சிக்கன் பிரியாணி ரெடி.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.