சாம்பார் சாதம்

Posted by

தேவையான பொருட்கள்:

மசாலா செய்ய:

 • பட்டை-3 அங்குல அளவு
 • கிராம்பு-5
 • மிளகாய் வத்தல்-2
 • கொத்தமல்லி விதை-1 டீ ஸ்பூன்
 • சீரகம்-1 டீ ஸ்பூன்
 • மிளகு-1/2 தேக்கரண்டி
 • கடலை பருப்பு-1 டீ ஸ்பூன்
 • உளுந்தம் பருப்பு-1 டீ ஸ்பூன்
 • வெந்தயம்-1/2 தேக்கரண்டி
 • தேங்காய்- 1/4 கப்

செய்முறை:

 • கடாயில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

சாதம் செய்முறை:

தேவையான பொருட்கள்:

 • நெய்-1 டீ ஸ்பூன்
 • எண்ணெய்-1டீ ஸ்பூன்
 • பூண்டு-நொறுக்கப்பட்ட பல் 2
 • சிறிய வெங்காயம்-1/2 கப்( 2 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
 • தக்காளி-1 பொடியாக நறுக்கியது
 • புளி-1/2 லெமன்

காய்கறிகள்:

 • கேரட், பச்சை பட்டாணி,பீன்ஸ்,உருளை,முருங்கை, கலந்து- 1 கப்
 • அரிசி-1 கப்
 • துவரம் பருப்பு-1/2 கப்
 • மஞ்சள்-1/2 தேக்கரண்டி
 • உப்பு-தேவைக்கு

செய்முறை:

 • காய்கறிகளை மஞ்சள் போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
 • அரிசி,பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து,சிறுது தண்ணீர் அதிகம் வைத்து வேக வைத்து கொள்ளவும்.
 • கடாயில் எண்ணெய், நெய் காய்ந்ததும்,பூண்டு போட்டு வதக்கவும்.
 • அடுத்து சின்ன வெங்காயம்,உப்பு,தக்காளி,மஞ்சள் தூள்,வேக வைத்த காய்கறி,அரைத்த பொடியில் பாதி, போட்டு வதக்கவும்.
 • புளி கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.
 • அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வேக வைத்த அரிசி பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.

தாளிக்க தேவையான பொருட்கள்:

 • நெய்-1டீ ஸ்பூன்
 • கடுகு-1/2 தேக்கரண்டி
 • கடலை பருப்பு-1/2 தேக்கரண்டி
 • வெந்தயம்-1/2 தேக்கரண்டி
 • மஞ்சள்-1/2 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை-2 கொத்து
 • அரைத்த பொடி
 • காயம்
 • மல்லி தழை

தாளிக்க:

 • கடாயில் நெய் ஊற்றி, கடுகு,கடலை பருப்பு, வெந்தயம்,காயம்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை போட்டு பொறிய விடவும்.
 • அரைத்த பொடியையும் சேர்த்து வதக்கி சாதத்துடன் கலக்கவும் 
 • மல்லி தழை தூவி இறக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.