சர்க்கரை பொங்கல்

Posted by

தேவையான பொருட்கள்

 • பச்சரிசி-1டம்ளர்
 • பாசி பருப்பு-1 ஸ்பூன்
 • வெல்லம்- பொடித்தது 1 1/2 டம்ளர்
 • ஏலக்காய்-3
 • முந்திரி,கிஸ்மிஸ்-தேவைக்கு
 • நெய்-தேவைக்கு
 • தண்ணீர்-3 1/2 டம்ளர்
 • பால்- 1டம்ளர்

செய்முறை:

 • முதலில் குக்கரில் அரிசி,பால், தண்ணீர்,பாசி பருப்பு, ஏலக்காய் போட்டு 4 சவுண்ட் விடவும்.
 • வெல்லத்தில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரையும் வரை விடவும்.
 • முந்திரி,கிஸ்மிஸை நெய்யில் வறுத்து கொள்ளவும்.
 • குக்கரில் சத்தம் அடங்கியதும்,வெல்லபாகு,வறுத்த முந்திரி போட்டு நன்கு கலந்து விடவும்.
 • அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்.
 • 3 நிமிடம் கழித்து இறக்கவும்.
 • சுவையான சர்க்கரை பொங்கல் தயார். 

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.