கோவை புகழ் சுப்பு மெஸ் மட்டன் பிரியாணி

Posted by

இந்த மெஸ் கோவையில் நிறைய கிளைகள் உள்ளன. அசைவ உணவிற்கு மிகவும் பிரபலமான மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரே இடம் சுப்பு மெஸ் தான். 
இங்குள்ள சுவை நமது நாவிற்கு என்றுமே விருந்தளிக்கும் சுவையில் இருக்கும். 
தேவையான பொருள்கள்:

 

சீரக சம்பா அரிசி  1 1/2 கப் 
மட்டனை ஊறவைக்க:

 

மட்டன்  கறி  400 கிராம் 

தயிர்  3 மேஜைக்கரண்டி 

இஞ்சி-பூண்டு  விழுது  1 மேஜைக்கரண்டி 

காஷ்மீர் மிளகாய் தூள்  1 தேக்கரண்டி 
பிரியாணி மசாலா அரைக்க: 
பட்டை  1 இன்ச் 

இலவங்கம்  4

காஜ்சுபத்திரி 3

ஏலக்காய்  2 

மிளகு  10

சோம்பு  1/2 தேக்கரண்டி 

கசகசா  1/2 தேக்கரண்டி 

இஞ்சி  1 இன்ச் 

பூண்டு  10 பற்கள் 

பச்சை  மிளகாய்  3

வர மிளகாய் 2

சின்ன வெங்காயம்  6

கொத்தமல்லி  1 கைப்பிடி 

புதினா  1 கைப்பிடி 

முந்திரி  பருப்பு  10
பிரியாணி செய்ய:

 

வேர்கடலை  எண்ணெய்  2 மேஜைக்கரண்டி 

ஊத்துகுளி வெண்ணை  1 மேஜைக்கரண்டி

மட்டன்  கொழுப்பு  200 கிராம் 

பிரியாணி  இலை  3

பட்டை  1 இன்ச் 

இலவங்கம்  3

அண்ணாச்சி மொக்கு  1

மராட்டிய மொக்கு  1

காஜ்சுபத்திரி  பூ  1

பெரிய வெங்காயம்  2 பெரியது  ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய்  5 ( பொடியாக நறுக்கியது )

கொத்தமல்லி இலைகள்  1 கைப்பிடி 

புதினா இலைகள்  1 கைப்பிடி 

தக்காளி  1 பெரியது  ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி-பூண்டு  விழுது  1 மேஜைக்கரண்டி 

உப்புத்தூள் தேவையான அளவு 

தேங்காய்  பால் 3 1/2  கப் 
செய்முறை:

 

1. மட்டனை எலும்பு இல்லாமல் வாங்கி கொள்ளவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து மட்டனை ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தும் சேர்த்து பிசைந்து குறைந்தது  1 மணிநேரம்  ஊறவைக்கவும். 
2. மசாலா அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும். 
3. இப்பொழுது  பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில்  மட்டன் கொழுப்பை போட்டு நன்றாக வதக்கவும்.  அதில் இருந்து நெய் போல பிரிந்து வரும் அது வரை நன்றாக வதக்கவும். 
4. பிறகு அதில் பட்டை,  இலவங்கம், பிரியாணி இலை,  அண்ணாச்சி மொக்கு, காஜ்சுபத்திரி, மராட்டிய மொக்கு , ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். 
5. பிறகு பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  
6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். 
7. அதில் ஊறவைத்தள்ள மட்டன் கலவையை சேர்த்து தேவையான அளவு  உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 
8. இப்பொழுது 1 கப் தண்ணீர் சேர்த்துகோங்க மூடியை மூடி  1 விசில் விட்டுகோங்க.  பிறகு ஆவி அடங்கியதும் அதில் தேங்காய் பால் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 
9. கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ஊறவைத்தள்ள சீரக சம்பா அரிசியை கொட்டி காரம் மற்றும் உப்பை சரி பார்த்துக்கொள்ளவும். தேவையெனில் சேர்த்து கொள்ளவும். காரத்திற்கு பச்சை மிளகாயை மட்டும் சேர்த்துகோங்க. பிறகு மூடியை மூடி  2 விசில் விடவும். பிறகு சிம்மில் வைத்து  1 விசில் விட்டுகோங்க அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும். 
10. பிறகென்ன சுடச்சுட நாவிற்கு சுவையான பிரமாதமான சுப்பு மெஸ் பிரியாணி தயார்! !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.