கோவை புகழ் காளான் சேவை

Posted by

இந்த உணவு கோவையில் சில ஓட்டல்களில் கிடைக்கும் உணவாகும்.  
தேவையான பொருட்கள்:
சேவை பாக்கேட்  1

வெங்காயம் பெரியது  2 ( பொடியாக நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது )

தக்காளி  2 ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய்  3 ( பொடியாக நறுக்கியது )

பட்டன் காளான்  100 கிராம்  ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி-பூண்டு விழுது  1 1/2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்  1 மேஜைக்கரண்டி 

கரம்மசாலா தூள்  2 தேக்கரண்டி 

கொத்தமல்லி தூள்  1/2  மேஜைக்கரண்டி 

கறிவேப்பிலை 1 கொத்து 

கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி 

எண்ணெய் 2 மேஜைக்கரண்டி 

கடுகு 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு 
செய்முறை:
1. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு  போட்டு நன்றாக வெடித்ததும்.கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். 
2. அதில் பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
3. அதில் பொடியாக நறுக்கிய வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். 
4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு நன்றாக வதக்கவும். தண்ணீர் விட வேண்டாம் ஏனெனில் காளான் வேகும் சமயத்துல தண்ணீர் விடும் அதுவே போதுமானது. அதில் மஞ்சள் தூள், மிளகாய் தாள், கொத்தமல்லி தூள், தேவையான அளவிலான உப்புத்தூள்  கரம்மசாலா தூளை போட்டு நன்றாக வதக்க வேண்டும். காளான் வெந்து சுருண்டு வரும் சமயத்துல மிளகு தூளை சேர்க்கவும். 
5. இப்பொழுது காளான் கலவையில் சேவையை உதிர்த்து சேர்க்கவும். நன்றாக கிளற வேண்டும். இதை 10 நிமிடங்கள் வரை நன்றாக கிளற வேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.