கோவை புகழ் கார ரசம்

Posted by

இந்த ரசம் நல்ல தூக்கலா உறைப்பாக இருக்கும். சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும். 
தேவையான பொருட்கள் 

தக்காளி  6 ( பொடியாக நறுக்கியது )

உப்புத்தூள் தேவையான அளவு 

வரமிளகாய்  தூள்  1 1/2 தேக்கரண்டி 

மஞ்சள்தூள்  1/2 தேக்கரண்டி 

பூண்டு பற்கள் 5

புளி  1 எலுமிச்சை அளவு 

கொத்தமல்லி தூள்  1 தேக்கரண்டி 

சீரகத்தூள்  1 1/2 தேக்கரண்டி 

மிளகு தூள் 2 தேக்கரண்டி 

வெல்லம் பொடித்தது  1/4 தேக்கரண்டி 

தண்ணீர்  1 கப் 
தாளிக்க 

 கடலை எண்ணெய்  1 மேஜைக்கரண்டி 

நெய்  1 தேக்கரண்டி 

சீரகம்  1 தேக்கரண்டி 

பூண்டு பற்கள்  4

சின்ன வெங்காயம்  3 ( பொடியாக நறுக்கியது )

வரமிளகாய்  3

கறிவேப்பிலை  5

கொத்தமல்லி இலைகள்  2 தேக்கரண்டி 
செய்முறை 
1. ஒரு வடசட்டியில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் அதில் பொடித்த தக்காளி,  வரமிளகாய் தூள்,   தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து நன்கு சிறு தீயில் கொதிக்க வைக்கவும்.  தக்காளி தண்ணீரோடு சேர்ந்து நன்கு கூழ் போல் ஆகும் வரை கொதிக்க விடவும். 
2. தக்காளி கொதி கலவையை ஆறவைத்து நன்கு கைகளால் கலவையை கரைத்து தக்காளி சாற்றை பிழிந்து கொள்ளவும். 
3. சுடு தண்ணீரில் புளியை 15 நிமிடங்கள்  ஊறவைத்து புளியை கரைத்து புளி  கரைசலை பிழிந்து எடுத்துக்கொள்ளவும். 
4. இந்த பிழிந்த  புளி கரைசலை தக்காளி கலவை சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். அதில்  தேவையான அளவு  தண்ணீர்,  ஒரு சிட்டிகை வரமிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தூள், சீரகம் தூள், வெல்லம் பொடித்தது இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 
5. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நெய்யையும் வடச்சட்டியில் ஊற்றவும்,  காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடித்ததும் அதில் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும் அதில் அம்மியில் நசுக்கிய பூண்டையும்,  அம்மியில் நசுக்கிநசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்கு 2 நிமிடங்கள்  வதக்கவும். 
6. அதில்  பொடித்த வரமிளகாய் சேர்க்கவும் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இந்த வடசட்டியில் தாளித்த பொருட்களை கொதித்து கொண்டு உள்ள ரச கலவையில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.