கோவை புகழ் அன்னபூர்ணா வெஜிடபிள் குருமா

Posted by

இந்த குருமா சப்பாத்தி, பரோட்டா, பூரி , கீ ரைஸ் போன்ற உணவு வகைகளுக்கு ஏற்ற பக்க உணவாகும்  ( சைட்டிஷ் ).
இதன் சுவையை நான் சொல்வதை விட கோவை மக்களை கேட்டு பாருங்களேன்! !! 
தேவையான பொருட்கள் :
காய்கறிகள் 1 1/4 கப்  ( பொடியாக நறுக்கிய காலிபிளவர், பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு, பச்சை பட்டாணி )

பிரியாணி இலை  1

கல்பாசி  1

சீரகம் 1/2 தேக்கரண்டி 

பெரிய வெங்காயம்  1 பெரியது  ( பொடியாக நறுக்கியது )

தக்காளி 1 பெரியது  ( பொடியாக நறுக்கியது )

புதினா இலைகள்  1 கைப்பிடி 

தயிர்  1 மேஜைக்கரண்டி 

இஞ்சி-பூண்டு விழுது  1 மேஜைக்கரண்டி 

காஷ்மீர் மிளகாய் தூள்  2 தேக்கரண்டி 

மஞ்சள்தூள்  1/4 தேக்கரண்டி 

கரம்மசாலா தூள்  1 தேக்கரண்டி

கஸ்தூரி மேத்தி  3 சிட்டிகை 

உப்பு தேவையான  அளவு 

வேர்கடலை எண்ணெய்  2 மேஜைக்கரண்டி 

நெய்  1 மேஜைக்கரண்டி 

அண்ணாச்சி மொக்கு 1

மராட்டிய மொக்கு 1
மசாலா அரைக்க:
தேங்காய் துருவல்  1/2 கப் 

பச்சை மிளகாய்  4

சோம்பு  1/2 தேக்கரண்டி 

சீரகம் 1/2 தேக்கரண்டி 

மிளகு 1/2 தேக்கரண்டி 

பட்டை  1 இன்ச் 

இலவங்கம்  3

முந்திரி பருப்பு 10

கசகசா 1 தேக்கரண்டி 

ஏலக்காய் 1
செய்முறை 
1. காய்கறிகள் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 
2. பிரஷர் குக்கரை அடுப்புல வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் அண்ணாச்சி மொக்கு,  மராட்டிய மொக்கு , பிரிஞ்சி இலை, கல்பாசி , சீரகம்   சேர்த்து நன்கு  வதக்கவும். 
3. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும். 
4. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக மசியுமாறு வதக்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை  வதக்கவும். 
5. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு 2 நிமிடங்கள்  கிளறவும். அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கஸ்தூரி மேத்தி யையும் தயிரையும் சேர்த்து நன்கு கிளறவும்.  பிறகு பிரஷர் குக்கரின் மூடிவைத்து வெயிட்டை போட்டு 2 விசில் சிம்மில் வைத்து விட  வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.