கோவை புகழ் அங்கண்ணன் கடை பிரியாணி

Posted by

கோவையில் நிறைய விடயங்கள் மிகவும் பிரபலம் அதில் ஒன்றுதான் அங்கண்ணன் பிரியாணி. 
இன்று கோவையில் எத்தனையோ பிரியாணி உணவகங்கள் வந்து விட்டது ஆனால் வெரைட்டி ஆல் சாலையில் உள்ள அங்கண்ணன் பிரியாணி கடைக்கு ஈடாகாது.  கோவையின் மிகவும் பழமை வாய்ந்த அடையாளங்களில் அங்கண்ணன் பிரியாணியும் ஒன்று. 
அங்கண்ணன் பிரியாணிக்கு  நிகரானது அங்கண்ணன் பிரியாணியே தான்.   இதன் சுவைக்கு அடிமை எத்தனையோ பிரபலங்களின் நாவும் தான். 
தேவையான பொருள்கள் 

சீரக சம்பா  அரிசி  500 கிராம் 

நாட்டுக்கோழி  750 கிராம் 

வேர்கடலை  எண்ணெய்  6 மேசைக்கரண்டி 

மிளகாய் தூள்  1 தேக்கரண்டி 

தயிர்  1/2 கப் 

உப்பு  தேவையான அளவு 

தண்ணீர்  2 கப் 

தேங்காய்  பால் 3 1/2 கப்

நெய்  3 மேஜைக்கரண்டி 

எலுமிச்சம்பழ சாறு  1/2 மேஜைக்கரண்டி 
மசாலா அரைக்க 

பச்சை  மிளகாய்  10

பட்டை  3

ஏலக்காய் 3

இலவங்கம்  3

ஜாதிக்காய்  1/2

காஜ்சுபத்திரி  1

இஞ்சி  50 கிராம் 

பூண்டு  75 கிராம்

சின்ன  வெங்காயம்  75 கிராம் 

முந்திரி பருப்பு  50 கிராம்

மிளகு  1 தேக்கரண்டி 

புதினா  இலைகள்  1 கைப்பிடி 

கொத்தமல்லி இலைகள்  2 கைப்பிடி 
செய்முறை 

1. அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து  30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 
2. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்துகோங்க நன்றாக மிக்ஸியில் நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும். 
3. நாட்டுகோழியை கழுவி சுத்தம் செய்து பிரஷர் குக்கரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு,  1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து,  பொடியாக நறுக்கிய 4 பச்சைமிளகாயையும் சேர்த்து, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக 3 விசில் விட்டு இறக்கவும். ( இதில் நாட்டுக்கோழி மற்றும் தண்ணீரை தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அல்ல )
4. பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நெய்யையும் ஊற்றவும் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 
5. அதில் மிளகாய் தூள் சேர்த்துகோங்க  நன்றாக வதக்க வேண்டும். அதில் அரை வேக்காடு நாட்டுக்கோழியை சேர்த்து நன்கு மசாலாவுடன் நன்கு கலந்து வருமாறு கிளறவும். பிறகு சிறிது உப்பு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். 
6. பிறகு நாட்டுகோழி கலவையில் தயிரை சேர்த்துகோங்க நன்றாக 5 நிமிடங்கள்  கிளறவும். 
7. இப்பொழுது நாட்டுகோழியில் உள்ள வடிசாறு எவ்வளவு கப் அளவு உள்ளது என்று சரி பார்த்துக்கொள்ளவும் . நாம் 500 கிராம்  அரிசியை கப்பில் அளந்தால் 2 1/2 கப் வரும்.  அப்பொழுது நாம் 5 கப் தண்ணீர் ( தேங்காய் பால் + நாட்டுக்கோழி வடிசாறு )  சேர்க்க வேண்டும். 
8. ஊறவைத்தள்ள அரிசியை  நாட்டுக்கோழி கலவையில் சேர்த்து நன்றாக கிளறி பிறகு அதில் நாட்டுக்கோழி சாறு + தேங்காய் பால்  சேர்த்துகோங்க நன்றாக அளந்து  ( 5 கப் வர வேண்டும் ).
9. அதில் கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் போட்டு மூடியை மூடி வெயிட் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். 
10. பிறகென்ன சுடச்சுட சுவையான அங்கண்ணன் கடை நாட்டுக்கோழி பிரியாணி தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.