கோதுமை உப்புமா

Posted by

தேவையான பொருட்கள்:

 • கோதுமை ரவை-1 டம்ளர்
 • பீன்ஸ்,காரட், பச்சை பட்டாணி-1 கப்
 • பெரிய வெங்காயம்-2
 • மிளகாய்-4
 • கடுகு,உளுந்து,கடலைப்பருப்புதலா 1 ஸ்பூன்
 • கறிவேப்பிலைதேவைக்கு
 • எண்ணெய்-1 ஸ்பூன்
 • பூண்டு, இஞ்சிசிறிது பொடியாக நறுக்கியது.
 • கொத்தமல்லி தழை
 • உப்பு

செய்முறை:

 • முதலில் ரவையை நன்கு வறுத்து கொள்ளவும்.
 • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
 • அடுத்து கறிவேப்பிலை,மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
 • அடுத்து வெங்காயம்,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
 • காய்கறிகளும் சேர்த்து கொள்ளவும்.
 • 1 டம்ளர் ரவைக்கு 2 1/2 டம்ளர்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 • உப்பு சேர்த்து ரவையை சேர்த்து குக்கரை மூடி 2 சத்தம் விடவும்.
 • ஆவி அடங்கியதும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.