கோடை கால உணவுகள்

Posted by

கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய  உணவுகள் :
• இந்த வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது . இதில் 97 சதவீதம் தண்ணீரைக் கொண்டுள்ளது. இது நமது உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
• வெள்ளரிக்காய்க்கு அடுத்தபடியாக முள்ளங்கியில் அதிக அளவு தண்ணீர்   சத்து இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் தண்ணீரின் அளவை அதிகரிக்கும்.
• எல்லா காலத்திலும் எளிதில் கிடைக்க கூடிய காய்கறி தக்காளி, இதில் அதிக அளவு ஊட்டச்சத்து இருக்கிறது.  மேலும் இதில் தண்ணீரின் அளவு மிக அதிகமாக இருப்பதால் நமது  உடலை எப்பொழுது குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
• நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளில் காலிஃப்ளவரும்  ஒன்றாகும் . இதில் 93 சதவீதம் தண்ணீர் இருக்கிறது.  இதை நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் தண்ணீர் அளவை அதிகரிக்கலாம். மேலும் இதற்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
• குடைமிளகாயில் நமது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து உள்ளது. ஆதலால் கோடைக் காலங்களில் குடைமிளகாயை வைத்து உணவு செய்து சாப்பிடுவது நல்லது.
• இறுதியாக கோடைக் காலத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர்கள் தண்ணீராவது அருந்த வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.