கொள்ளு ரசம்

Posted by

தேவையான பொருட்கள்:

 • தக்காளி-2
 • பூண்டு-5 பல்
 • மிளகு
 • சீரகம்
 • வெந்தயம்
 • மிளகாய் தூள்
 • மல்லி தூள்
 • எண்ணெய்
 • காயம்
 • கடுகு
 • மஞ்சள் தூள்
 • கறிவேப்பிலை
 • கொத்தமல்லி இலை
 • உப்பு
 • கொள்ளு பால்

செய்முறை:

 • 3 ஸ்பூன் கொள்ளு எடுத்து ஒரு 5 மணி நேரம் ஊற விட்டு,குக்கரில் வேக வைத்து, பால் எடுத்து வைத்து கொள்ளவும்.
 • பூண்டு,மிளகு,சீரகம் மிஸ்யில் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 • கொள்ளு பால் உடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் கலந்து கொள்ள வேண்டும்.
 • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி,கடுகு,கறிவேப்பிலை,காயம்,வெந்தயம், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.
 • பின்பு அதில் தக்காளி,உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
 • கறிவேப்பிலை சேர்த்து நன்கு தக்காளியை கரண்டி வைத்து நசுக்கி விடவும்.
 • அடுத்து கொள்ளு பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
 • மல்லி தழை தூவி இறக்கவும்.

https://youtu.be/v0-zuuFslnQ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.