கொங்கு நாயுடு வீட்டு சிக்கன்

Posted by

தேவையான பொருட்கள் 
சிக்கன்  1/2 கிலோ 

பெரிய வெங்காயம்  1 கப் ( பொடியாக நறுக்கியது )

தக்காளி  3/4 கப்  ( பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் 5 ( பொடியாக நறுக்கியது )

இஞ்சி-பூண்டு விழுது  3 மேஜைக்கரண்டி 

வரமிளகாய் பேஸ்ட் 2 மேஜைக்கரண்டி 

மிளகாய் தூள்  2 தேக்கரண்டி 

மல்லித்தூள்  1 மேஜைக்கரண்டி 

கரம்மசாலா தூள்  1 மேஜைக்கரண்டி 

உப்புத்தூள் தேவையான அளவு 

கொத்தமல்லி இலைகள்  1 கைப்பிடி  ( பொடியாக நறுக்கியது )

மஞ்சள்தூள்  1 தேக்கரண்டி 

தாளிக்க 
எண்ணெய்  6 மேசைக்கரண்டி 

பிரியாணியி இலை  1

லவங்கம்  3

பட்டை  1 இன்ச் 

கறிவேப்பிலை  1 கொத்து 
செய்முறை 
1. சிக்கனை நன்றாக கழுவி மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை சேர்த்து நன்கு அலசி தண்ணீரை வடிக்கட்டவும். 
2. வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் லவங்கம், பிரிஞ்சி இலை, பட்டை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வதக்கவும். 
3. பிறகு கழுவிய சிக்கனை சேர்த்து உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். 
4. சிறு தீயில் ஒரு நிமிடம் வதக்கவும் , பின்பு மூடியை  போட்டு  10 நிமிடம் வரை நன்றாக வதக்கவும் . தண்ணீர் சேர்க்க தேவையில்லை,  வேகவைக்கும் சமயத்தில் அது விடும் நீரே அதற்கு போதுமானது. 
5. இன்னொரு வடைச்சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த வெங்காயத்தை சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.  
6. பிறகு இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும் அது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
7. இப்பொழுது பொடியாக நறுக்கிவைத்து உள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு வரமிளகாய் பேஸ்ட்டைசேர்த்து வதக்கவும் சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து நன்கு  வதக்கவும். 
8. இப்பொழுது  அது நன்றாக கிரேவி போல் ஆனதும்  அதில் மிளகாய் தூள் ,கொத்தமல்லி  தூள்  மற்றும் கரம்மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .
9. இந்த சமயத்தில் ஏற்கனவே வேக வைத்துள்ள சிக்கனை இந்த கலவையில் போட்டு கலக்கவும். 
10. சிறிது நேரம் தாளித்த சிக்கன் துண்டுகளும் தக்காளி வெங்காய கிரேவியில் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க விட்டு தண்ணீர் விடாமல் நன்றாக பிரட்டி எண்ணெய் பிரியும் சமயத்துல கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
குறிப்பு  :
1. சிக்கன் கழுவும் சமயத்துல தண்ணீரை முழுவதுமாக வடித்து விட வேண்டும். 
2. சிக்கன் வேகும் சமயத்துல ஒரு துளி தண்ணீர்கூட விடக்கூடாது. 
3. வரமிளகாய் பேஸ்ட்டை தயார் செய்வதற்கு  வரமிளகாயை  தண்ணீரில்  ஊறவைத்து  30 நிமிடம்  கழித்து  எடுத்து அரைத்து கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.