கே கப் சி சிக்கன் ஹோம்மெய்ட்

Posted by

இந்த மாதிரி சிக்கன்களை எப்போதும் சாப்பிடாமல், என்றாவது ஒரு நாள் அதுவும் வீட்டில் நம் கை பட செய்து ஆரோக்கியமாக இருப்போம்.ருசிக்கு அடிமை ஆகிவிட்டால் நம்மால் உடல் நலத்தை பேண முடியாது.நாம் கடையில் வாங்கும் அளவிற்கு ருசியாக இல்லாவிட்டாலும்,ஆரோக்கியமான உணவை நம் குடும்பதிற்க்கு கொடுத்தோம் என்கிற திருப்தியோடு வாங்க சமைக்கலாம்.
ஊற வைக்க:

 

 • எலும்புடன் ஒரு முழு கோழி  அல்லது லெக் பீஸ் – ஒரு கிலோ
 • வெங்காயம் – ஒன்று (பெரியது)
 • தக்காளி- ஒன்று (பெரியது)
 • இஞ்சி – மூன்று அங்குல துண்டு
 • பூண்டு – ஆறு பல்
 • பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

 


டிப் செய்து பொரிக்க:

 • மைதாஒரு கப்
 • கார்ன் ப்ளார்கால் கப்
 • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
 • உப்புஅரை தேக்கரண்டி
 • எண்ணெய் + பட்டர்பொரிக்க தேவையான அளவு

 

செய்முறை:

 • வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

 

 • இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.

 

 • டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.
 • வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.

 

 • சுவையான கேஎப்சி சிக்கன் ரெடி.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.