கேப்பை இட்லி

Posted by

இப்பொழுது நாம் வாழும் கால கட்டத்தில் அனைவருக்கும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படுகிறது. அதில் இருந்து மீண்டு வர நாம் என்ன வெல்லாமோ முயன்று கொண்டிருக்கிறோம்.அதற்க்கு உடற்பயிற்சியோடு சத்தான உணவையும் உண்ண வேண்டும்.டயட் என்கிற பெயரில் சாப்பிடாமல் இருப்பதினால் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். உணவே மருந்து என்பதர்கேற்ப சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

தேவையான பொருட்கள்:

  • இட்லி அரிசி  – 1 டம்ளர்
  • கேப்பை           –  1/2 டம்ளர்
  •  உளுந்து          –  3/4 டம்ளர்
  •  வெந்தயம்      –  2 ஸ்பூன்
  •   உப்பு                 –  தேவையான அளவு

செய்முறை:

  • இட்லி அரிசி,வெந்தயம்,கேப்பை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஊற விடவும்.
  •  உளுந்தை தனியாக ஊறவிடவும்.
  •  இவை  அனைத்தையும் ஒரு 5மணி    நேரம் ஊற விடவும்.
  •  பின்பு கிரைண்டரில் ஆட்டி எடுத்து ,  உப்பு  போட்டு நன்றாக கலந்து 5 மணி  நேரம் கழித்து,இட்லி தட்டில் ஊற்றி  எடுத்தால்  சுவையான இட்லி ரெடி.
  •  இதனுடன் தேங்காய் சட்னி சுவையாக  இருக்கும்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.