கூட்டாஞ்சோறு

Posted by

தேவையான பொருட்கள்:

 • துவரம்பருப்பு- 100 கிராம்
 • அரிசி- 400 கிராம்
 • புளி கரைசல்-ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு 
 • உப்பு- தேவைக்கேற்ப
 • முருங்கைக்காய்-2
 • பீன்ஸ்- 1 கை பிடி
 • கேரட்-1
 • பச்சை பட்டாணி-1 கப்
 • கத்திரிக்காய்-5
 • மிளகாய் தூள்-2ஸ்பூன்
 • மல்லி தூள்-1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
 • சாம்பார் பொடி- 3 ஸ்பூன்
 • காயம்-1/4 ஸ்பூன்
 • தக்காளி-2
 • சின்ன வெங்காயம்-1கப் அரிந்தது.
 • கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை-தேவைக்கு
 • நல்லெண்ணெய்-தாளிக்க
 • கடுகு,உளுந்து- 1 ஸ்பூன்
 • ஜீரகம்-1 ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய்-3  

செய்முறை:

 • முதலில் குக்கரில்  மேலே கூறிய அனைத்து பொருட்களும் ,சின்ன வெங்காயம் வரை உள்ள பொருட்களை போட்டு ,குக்கரில் போட்டு 4 சத்தம் வரும் வரை விடவும்.
 • பின்பு,வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்து கறிவேப்பிலை,மிளகாய் வற்றல், ஜீரகம் போட்டு வெடித்ததும் அரிசி காய்கறி கலவையில் ஊற்றினால் கூட்டாஞ்சோறு தயார்.
 • மேலே  மல்லி இலை தூவி இறக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.