குட்டீஸ் ஹெல்த்தி பீட்ரூட் குக்கீஸ்

Posted by

தேவையானவை: 
தோல் நீக்கிய பீட்ரூட் – 2, 

தோல் நீக்கிய கேரட் – 1, 

ஓட்ஸ் – 1/2 கப், 

கொத்தமல்லி – தேவையான அளவு, 

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், 

மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன், 

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: 
வெறும் கடாயில் ஓட்ஸை வறுக்க வேண்டும். சிறிய துண்டுகளாக பீட்ரூட், கேரட்டை வெட்டி, வேகவைத்து மசித்து, பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன், ஓட்ஸ், கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய்த் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு போட்டுப் பிசைந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து, கட்லெட் போல தட்ட வேண்டும். தவா சூடானதும் எண்ணெய் விட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
பலன்கள்
உடலில் ரத்தம் உற்பத்தியாகச் சிறந்த உணவு இது. குழந்தைகள், பெண்கள் அவசியம் சாப்பிடலாம்.
சருமம் பொலிவடைவதற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.
மாலை நேர நொறுக்குத்தீனியாக, பெரியவர்களும் சாப்பிட்டுவரலாம்.
நன்றி:
பிரியங்கா, டயட்டீஷியன்

மீனா கதிர், சமையல்கலை நிபுணர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.