காளான் முந்திரி மசாலா

Posted by

தேவையான பொருட்கள்:

  • காளான்-1கப்
  • வெங்காயம்-2
  • தக்காளி-1
  • மஞ்சள் தூள்-1 சிட்டிகை
  • உப்பு-தேவைக்கு
  • இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  • எண்ணெய்-தேவைக்கு
  • கரம் மசாலா-1ஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • தேங்காய்-2ஸ்பூன்
  • முந்திரி-8
  • கொத்தமல்லி தழை
  • மல்லி பொடி-1 ஸ்பூன்
  • மிளகாய் பொடி-1 ஸ்பூன்
  • சீரக பொடி-1/2டேபிள் ஸ்பூன்

மசாலா அரைக்க:

தேங்காய்,கரம் மசாலா,முந்திரி அரைத்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

  • வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • காளானை கழுவி வெட்டி எடுத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.
  • அடுத்து காளான் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  • அடுத்து மஞ்சள் தூள், உப்பு,மிளகாய் பொடி, மல்லி பொடி, சீரக தூள் போட்டு நன்கு வதக்கவும்.
  • அடுத்து அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • 10 நிமிடம் கழித்து தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும்,மல்லி தழை தூவி பறிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.