காளான் சுக்கா….

Posted by

மஸ்ரூம் சுக்கா செய்வது மிக எளிது.வீட்டில்

உள்ள

பொருட்களை கொண்டே எளிதில் செய்து விட

முடியும்.இது இட்லி,தோசை,சாதம்

போன்றவைகளுக்கு பொருத்தமானது.

செய்ய தேவையான பொருட்கள்:

* காளான் – 100 கிராம்

* வெங்காயம் – 3

* இஞ்சி பொடியாக நறுக்கியது – 1 சிறிய

துண்டு

* பூண்டு பொடியாக நறுக்கியது – 4 பல்

* மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்

* மல்லி தூள் – 1 ஸ்பூன்

* சீரக தூள் – 1/2 ஸ்பூன்

* மஞ்சள் பொடி – 1 பின்ச்

* மிளகு தூள் -1/2 ஸ்பூன்

* மல்லி தழை – சிறிது

* கறிவேப்பிலை – சிறிது

* நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

* உப்பு. – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் காளானை நன்கு கழுவி சிறியதாக

வெட்டி, தண்ணீரை வடித்து வைத்து

கொள்ளவும்.

குறிப்பாக தண்ணீரே இல்லாமல் நன்கு

பிழிந்து

எடுக்க வேண்டும்.

* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்

சிறிதளவு
எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில்

பொடியாக

வெட்டி வைத்துள்ள இஞ்சி,

பூண்டு,வெங்காயத்தை சேர்த்து

நன்கு வதக்கவும்.

* வெங்காயம் கண்ணாடி போல வெந்ததும்

அதில்

கழுவி வைத்துள்ள காளானை சேர்த்து

வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள்,மிளகாய்

தூள்,மல்லி தூள்,தேவையான அளவு

உப்பு,மிளகு தூள் போட்டு நன்கு வதக்கவும்.

* காளானில் தண்ணீர் அதிகம் உண்டு.

எனவே
தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.

* இப்பொழுது குக்கரை மூடி 2 சத்தம் வரும்

வரை  சிறு

தீயிலேயே வைக்கவும்.

* ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து மல்லி

இலை, கறிவேப்பிலை போட்டு பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.