காரட் சட்னி

Posted by

தேவையான பொருட்கள்:

 • கேரட் -4 துருவியது
 • சின்ன வெங்காயம்-8
 • வரமிளகாய்-3
 • கடலை பருப்பு-1டேபிள் ஸ்பூன்
 • புளி-சிறிய அளவு
 • இஞ்சி
 • உப்பு-தேவையான அளவு
 • எண்ணெய்
 • கடுகு,உளுந்தம் பருப்பு
 • கறிவேப்பிலை
 • காயத்தூள்-1 சிட்டிகை

செய்முறை:

 • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட் துருவல் சேர்த்து,பச்சை வாசனை போக நன்கு வதக்கி,தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
 • மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடலை பருப்பு, வரமிளகாய்,புளி மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர விடவும்.
 • பின்பு மிக்ஸியில் வதக்கிய பொருட்கள் உடன் உப்பு,இஞ்சி தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
 • இறுதியாக தாளித்து ஊற்றவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.