கத்திரி வாழைப் பூ தொக்கு

Posted by

தேவையான பொருட்கள்:

  • கத்திரிக்காய்-3
  • வாழைப்பூ-50 கிராம்
  • பட்டை-சிறு துண்டு
  • பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2கப்
  • தக்காளி சாறு-1கப்
  • கடுகு-சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது-சிறிது
  • மிளகாய் தூள்-2டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள்-1 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை-சிறிது
  • எண்ணெய்,உப்பு-தேவையான அளவு

செய்முறை:

  • கத்திரிக்காயை வெட்டி எண்ணெய் விட்டு வதக்கவும்.
  • வாழைப்பூ உடன் உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அதில் வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி சாறு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • வேகவைத்த கத்திரிக்காய்,வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.
  • மல்லித்தழை தூவி இறக்கவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.