கத்திரிக்காய் பச்சடி

Posted by

தேவையான பொருட்கள்:

  • கத்திரிக்காய் – 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம்- 1 கப்
  • பச்சை மிளகாய்-4 
  • புளி-சிறிய உருண்டை
  • உப்பு-தேவையான அளவு
  • ஜீரகம்-1ஸ்பூன்
  • கடுகு உளுந்து- 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை – சிறிது
  • எண்ணெய்- 1 ஸ்பூன்
  • தேங்காய் – 3ஸ்பூன்

 

செய்முறை:

  • முதலில்  கத்திரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  • புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.
  • தேங்காய்,மிளகாய்,ஜீரகம்,3 வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை சிறியதாக வெட்டி வைத் து  கொள்ளவும்.
  • அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து சிறுது எண்ணெய் ஊற்றி காயா விடவும்.
  • கடுகு உளுந்து போட்டு வெடிக்க விடவும்.
  • கறிவேப்பிலை போடவும்.
  • வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம்  வேந்தஸ்தும்,கத்திரிக்காயை போட்டு நன்கு தோல் சுருங்கும் வர்சி வதக்கவும்.
  • அடுத்து புளி, உப்பு,தேங்காய் விழுது போட்டு ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடவும்.
  • 3 சத்தம் வந்ததும் இறக்கவும்.
  • சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து கரண்டி வைத்து நன்கு கடைந்து விடவும்.
  • சுவையான கத்திரிக்காய் பச்சடி ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.